திருமந்திரம் – 931

திருமந்திரம் – 931

அகார வுகார சிகார நடுவாய்
வகாரமோ டாறும் வளியுடன் கூடிச்
சிகார முடனே சிவன்சிந்தை செய்ய
ஒகார முதல்வன் உவந்துநின் றானே.1

அகர உகரம் ஓங்காரத்தைக் குறிக்கும். சிகரவகரம் திருவைந்தெழுத்தைக் குறிக்கும். இவை ஓம் நமசிவய எனவாகும். இவற்றை ஆறெழுத்து மந்திரம் என்ப. சிவசிவ என்று இடையறாது உயிர்ப்புடன் எண்ணிக்கொண்டிருக்க ஓங்கார முதற்பொருளாகிய சிவபெருமான் தோன்றியருள்வன்.

அகரம்..ஆறும் – பிரணவத்தோடு கூடிய ஐந்தெழுத்து; சடாக்கரம். வளி…செய்ய – சிகரத்துடன் தொடங்கிக் காற்றைப் பிடிக்கும் கணக்கறிந்து சிவன் சிந்தனைசெய்ய.

Share