திருமந்திரம்

திருமந்திரம்

*திருமந்திரம்*

 மாலாங்க னேயிங்கு யான்வந்த காரணம்
நீலாங்க மேனியள் நேரிழை யாளொடு2
மூலாங்க மாக மொழிந்த திருக்கூத்தின்
சீலாங்க வேதத்தைச் செப்பவந் தேனே.

*உரை:* திருமூல நாயனார் தம் மெய்கண்ட மாணவருள் ஒருவராகிய மாலாங்கரைப் பார்த்து அருளுகின்றனர். மாலாங்கரே! சிவவுலகை நீங்கி ஓங்கிய தென்தமிழ் நாட்டகத்துக்கு அருள் என்னைக் கொண்டுவந்த காரணம் கூறுகின்றேன் கேள். சிவபெருமான் திருமலைக்கண் அழகிய நீலவண்ணத் திருமேனியும், நேரிய பொன்மணி அணிகளும் பூண்ட அம்மையுடன் திருவைந்தெழுத்தே திருவுருவாகக் கொண்டு ஒலிமுடிவாம் நாதாந்தத்துச் செய்தருளும் திருக்கூத்தின் அடிப்படை யுண்மைக் காரணங்களை மொழிந்தருளினன். அத்தகைய அருளொழுக்கு நிறைந்த தமிழ்முறையினை வேதமெனவும் சிவாகமம் எனவும் கூறுப. அதைச் செப்புதற் பொருட்டே யான் வந்தேன்.

*சொல் விளக்கம்*
நீலாங்கம் – கரிய அழகிய. மூலாங்கம் – அடிப்படை யுண்மைக் காரணங்கள். சீலம் – ஒழுக்கம்.
நீலாங்க . . . . . வேதம் – தமிழ் நான்மறை. (அறம் – பொருள் – இன்பம் – வீடு.)

Share