தேவர்கள் யார்? அசுரர்கள் யார்?

தேவர்கள் யார்? அசுரர்கள் யார்?

காசியபர் சப்தரிஷிகளில் ஒருவர். அவர் மரிசி முனிவரின் மகனாவார். இவர் திதி, அதிதி, தனு, காட்டை, அரிட்டை, சுரசை, இளை, மினி, குரோதவசை, தாம்பிரை, சுரபி, சரமை, திமி என்ற பதிமூன்று தட்சனின் குமாரிகளையும், விந்தை, கத்ரு, பதங்கி, யாமினி ஆகியோரையும் மணந்தவர். இவரே தேவர்களுக்கும், அசுரர்களுக்கும், நாகர்களுக்கும், மனிதர்களுக்கும் ஆதி தந்தையாவார். அதிதி காசியப முனிவரின் முதல் மனைவி. அதிதியின் இளைய சகோதரி திதி. அதிதிக்கும் திதிக்கும் கருத்துவேறுபாடுண்டு.அதிதி இந்திரன், அக்னி, சூரியன், வாமனர் உட்பட அனைத்து தேவர்களின் தாய். அதிதியின் மகனான இந்திரனைவிட பலமிக்க குழந்தையை தன் கணவன் காசியப முனிவரிடம் வேண்டினாள் திதி. திதி தன் துற்குணத்தால் அசுரர்களையும், நாகர்களையும் பெற்றாள்.

Share