யார் கடவுள்?

யார் கடவுள்?

கடவுள் என்பவர் அண்டம் முழுவதையும் படைத்துக் காப்பவர் என்றும், அவர் எல்லாச் சக்திகளும் பொருந்தியவர் என்றும், இறப்பு, பிறப்பு, இரவு, பகல், இன்பம், துன்பம் போன்ற உலக வாழ்வில் தொடர்புடைய அனைத்தையும் கடந்து நிற்கும் ஏகாந்த (மறைபொருள்) நிலை.

மனிதனாக பிறந்து உலகத்தில் இன்பம், துன்பங்களை அனுபவித்து பிறகு இறப்பவாரா கடவுள்?. இன்ப துன்பங்களுக்கு அகப்பட்டு இருக்கும் அப்பாவி மனிதர்களிடம் நான் கடவுளின் அவதாரம் என்று சொல்லி உங்கள் பிரச்சனைகளை தீர்த்து வைக்கிறேன் என்பான். பிரச்சனை தீர்ந்ததும் அதை மக்கள் நம்பி அவனையே கடவுளாக மாற்றிவிடுகின்றனர்.

மதிகெட்டவனிடம் வெளுத்ததெல்லாம் பால் என்றால் நம்பித்தானே ஆவான். பிரபஞ்சம் உருவாகி பல கோடி வருடங்கள் ஆனது அப்போது உருவாகாத கடவுள் 1000,2000 வருடங்களுக்குள்ளே பிறந்தவனா கடவுள்?.

அப்படி நீஙகள் நம்பும் கடவுள் பிறந்து இறந்து இருந்தால் அவரை கடவுள் என்று சொல்லாதீர்கள். அவர்கள் மகான் என்று என்னி குருவாக ஏற்றுக்கொள்ளுங்கள். ஆளுக்கொரு கடவுள் ஆளுக்கொரு மதங்களை உருவாக்கதீர்கள்.

Share