வீரபத்ரன்

வீரபத்ரன்

வீரபத்திரர் சிவபெருமானது நெற்றிக் கண்ணில் இருந்து தோற்றுவிக்கப்பட்ட கடவுள். சிவபெருமானை மருமகனாகக் கொண்ட கர்வத்தினால் தக்கன் சிவனை மதியாமலும் அவருக்கு கொடுக்க வேண்டிய அவிர்பாகத்தைக் கொடுக்காமலும் யாகத்தை நிகழ்த்தினான். நியாயம் கேட்டு நின்ற தாட்சாயணியையும் மதிக்காமல் பேசவே தாட்சாயணி யாகத்தீயில் வீழ்ந்து தன்னை மாய்த்துக் கொள்ள முனைய, ருத்திர தாண்டவடிய சிவனின் உடலெங்கும் தோன்றிய வியர்வைத் துளிகள் ஆயிரம் வீரபத்திரராகத் தோன்றி பின் அவை ஒன்றாகின. கடுங்கோபத்துடன் யாகசாலை சென்று அங்கிருந்த தேவர், முனிவர் சகலரையும் துவம்சம் செய்தார். தக்கனின் சிரசை தம் கைவாளினால் அறுத்து வதம் செய்தார். தக்கன் ஆட்டுக்கடா வடிவெடுத்து வீரபத்திரனிடம் மன்னிப்புக் கேட்டு நின்றான். வீரபத்ரன் என்றால் அதர்மதை அழித்து தர்மத்தை காப்பவன்.

Share