சித்தர்களின் குரல் பாவம் போக்கும் கயிலாயம்.

——————————————— — {சிவன் ஏன் கைலாயத்தை தேர்ந்தெடுத்தார ்? } இந்திய நிலத்திணிவு (Indian Plate) ஆசியாவுடன் (Eurasian Plate) மோதுமுன்னர் இடம்பெற்ற 6,000 கி.மீட்டருக்கு மேற்பட்ட அதன் பயணம். சுமார் 40 தொடக்கம் 50 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் நடைபெற்றது. இமயமலை ****************** இந்நில உலகிலேயே ஒப்பற்ற மிகப் பெரிய, மிக உயர்ந்த, மாபெரும் மலைத்தொடர் இந்த இமயமலைத் தொடர்தான். எப்பொழுதும் உறைபனி மூடி இருக்கும். இந்த இமயமலைத் தொடர் ஆசியாவிலுள்ளது. இந்திய துணைக்கண்டத்தின் வட எல்லையாக அமைந்துள்ளது. இம்மலைத்தொடருக்கு வடக்கே 4,300 மீட்டர் உயரத்திலே திபெத் உயர் பீடபூமி உள்ளது. இது மேற்கே காஷ்மீர்-சிங்கா ங் பகுதி முதல் கிழக்கே திபெத்- அருணாசல பிரதேசம் பகுதி வரை நீண்டு இருக்கிறது. உலகின் ஒப்பற்ற மிக உயர்ந்த கொடுமுடியாகிய எவரெஸ்ட் சிகரம் இவ் இமயமலையிலேயே உள்ளது. இவ்விமையமலைத் தொடர் எத்தனையும் பெரிய மலைத்தொடர் என்றால், இத்தொடரிலே 100க்கும் அதிகமான எண்ணிக்கையில் 7,000 மீட்டரையும் மீறியப் பேருயர் தனிமலைகள், கொடுமுடிகள் உள்ளன. ஆனால் இவ்விமய மலைத்தொடரைத் தவிர்த்து எஞ்சி உள்ள இப்பெருநில உலகில் ஒருமலையும் கூட 7,000 மீட்டர் உயரத்தை மீறி இல்லை. தென் அமெரிக்காவிலே அர்ஜெண்டைனாவிலே உள்ள அக்கோன்காகுவா பெருமலைதான் அடுத்த மிகப்பெரிய மலை (6,962 மீ உயரம்). இமயமலைத் தொடர் மிகப்பெரிய நிலப்பரப்பில் அடுக்கடுக்காக 2,400 கி.மீ தொலைவு நீண்டு விரிந்துள்ளது. இமயமலையின் அண்மை பகுதிகளேயே தெற்கு ஆசியாவின் தொன்மையான சமயங்களான இந்து மதம், புத்த மதம் உருவாகி வளர்ச்சியடைந்தது.. வரலாற்றில் இமயமலையின் பங்கு ********************************************* ******* இதன் உயரமான பரவலினால் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இந்தியாவின் இயற்கை அரணாக விளங்குகிறது. இந்திய துணைக்கண்டத்தின ை மங்கோலிய, சீனா மக்களின் நாகரிகத்திலிருந்து பிரிக்கின்றது. உதாரணமாகச் செங்கிஸ்கானின் படையின் இந்தியாவின் ஆக்கிரமிப்பை கட்டுப்படுத்திய தில் இமயமலைக்கு பங்கு உண்டு. காணப் பிறவிகள் ஆயிரம் தவம் செய்தல் வேண்டும், கண்ட பின் உண்டோ பிறவியும் என்று ஞானிகள் கூறியுள்ளனர். அத்தகைய சிறப்புக் கொண்ட திருக்கயிலாய தரிசனமும், மானசரோவர் ஸ்நானமும் தேவர்களுக்கும் கிடைத்தற்கரிய பேராகும். சிற்றம்பலம் என்பது ஒரு பரமார்த்திக நிலை. இப்பெயர் கொண்ட தலம் சிதம்பரத்தில் உள்ளது. ஆனால் திருக்கயிலாயமோ இயற்கையாகவே லிங்கமாக உள்ளது. எனவே இமயமலையிலே வருடம் முழுவதும் பனி நிறைந்துள்ள சிகரமான கைலாயத்தை நாம் சிவபெருமானாகவே வழிபடுகின்றோம். எந்த ருத்ரன் அக்னி, நீர், செடி, கொடி (மூலிகைகள்), மரம் மற்றும் பிரபஞ்சம் முழுவதும் ஊடுருவி நிலைத்திருக்கின்றோரோ அந்த ருத்ர பகவானை வணங்குகிறோம் என்று ஸ்ரீருத்ரத்திலே சிவபெருமானின் பெருமை கூறப்பட்டுள்ளது. அவர் பார்வதியம்மையுடன் நித்ய வாசம் செய்யும் தலம் தான் திருக்கயிலாயம். நமது நாட்டின் வடக்கு எல்லையும் அரணுமான இமயமலையே புராணங்களின் படி பார்வதியின் தாய் வீடு. மலைகளுக்கெல்லாம் அரசனான இமய மலையின் அரசன் இமவான் மகளாக பார்வதிதேவி பிறந்து, வளர்ந்து விளையாடி தவமிருந்து சர்வேச்வரனை கை பிடித்த இடம் கயிலையாகும். உலகத்திலேயே உயரமானதும், அதே சமயத்தில் இளைய மலை இமயமலை தான். இம்மலை சுமார் 30 மில்லியன் வருடங்களுக்கு முன் தோன்றியது. ஹிம் என்றால் பனி என்று அர்த்தம். எனவே எப்போதும் அந்த பனி நிறைந்த மலைக்கு ஹிம் + ஆலயம். இமாலயம் என்று பெயர் ஏற்பட்டது. எப்போதும் பனி மூடிய சிகரங்களை கொண்டுள்ளதால் இம்மலைத் தொடர் அதிகமாக சிதைவு அடையவில்லை. இம்மலைத் தொடர் கிழக்கு மேற்கில் இரண்டாயிரம் கிலோ மீட்டர் தூரம் விரிந்து பரந்துள்ளது. இந்த மலைத் தொடர்கள் மட்டும் இல்லாமல் இருந்திருந்தால் நம்முடைய இந்தியத் திருநாடே பாலைவனமாக மாறியிருக்கும். இந்து மகா சமுத்திரத்திலிருந்து வரும் மேகக்கூட்டங்களை தடுத்து நிறுத்தி இந்திய திருநாட்டை வளமிக்க நாடாக மாற்றியுள்ளது இம்மலைகள். அகழ்வாராய்ச்சியின் மூலமாக முதன் முதலில் நாகரீகம் இந்த இமய மலையிலிருந்து உற்பத்தியாகி ஓடும் ஆற்றின் கரையோரங்களில் தான் தோன்றியது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு நாகரீகத்தின் தொட்டிலும் இமய மலைதான். இம்மலை மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. அவை சிறிய இமயம், பெரிய இமயம், எல்லை கடந்த இமயம். இவற்றில் கைலாயம் எல்லை கடந்த இமயத்தில் அமைந்துள்ளது. பெரிய இமயத்தின் தென் பகுதியில் மற்ற இமய மலையின் புண்ணிய தலங்களான ரிஷகேசம். திருக்கேதாரம், பத்ரிகாச்ரமம். கங்கோத்ரி, யமுனோத்ரி முதலியவை உள்ளன. யஜுர் வேதத்தின் தலை சிறந்த பகுதியான ஸ்ரீ ருத்ரத்திலே சிவபெருமான் கைலாய வாசன் என்பதை கிரிஸந்தா, கிரித்ரா, உள்ளங்கை நெல்லிக்கனி போல உணர்த்துகின்றன. இம்மலையின் பெருமையைப் பற்றி காளிதாசர் தமது குமாரசம்பவத்திலே இவ்வாறு பாடுகின்றார். “வடக்கிலே அமைந்துள்ளது ஒரு பெரிய மலை. எப்போதும் பனியினால் போர்த்தப்பட்ட மலை. தெய்வீகம் பொருந்திய மலை. கிழக்கு கடலிலிருந்து மேற்கு கடல் வரையில் விரிந்து பரந்துள்ள விசாலமான மலை’.’ இம்மலையின் புனிதத்தன்மையை பற்றிய குறிப்புகள் ரிக் வேதம், சிவ புராணம், ராமாயணம், உபநிடதங்கள் முதலியவற்றில் உள்ளன. இம்மலை “பூலோக மேருவாக” கருதப்படுகின்றது. சிவபெருமானும் பார்வதிதேவியும் நித்திய வாசம் செய்யும் தலம் இது. ராமாயணத்தில் இமய மலைக்கு இணையான மற்றொரு மலை இல்லை என்றால் அதன் உச்சியிலே அது பரம பவித்ரமான கைலாயத்தையும், மானசரோவரையும் கொண்டுள்ளது. கைலாய பர்வதத்தை தரிசனம் செய்தவுடனே ஒருவருடைய பாவங்கள் எல்லாம் சூரியனைக் கண்ட பனி போல விலகி விடுகின்றது என்று கூறப்பட்டுள்ளத. இமயமலையின் பனி குவியலுக்குள் பல கோடி ரகசியங்கள் புதைந்துள்ளன. அவைகள் எளிதில் கண்டுபிடிக்க கூடியவையல்ல. மனிதனின் விஞ்ஞான சக்தியையும் மீறியவையாக அவைகள் உள்ளன. அவற்றுள் ஒன்று தான் கயான்கன்ஜ் . கயான்கன்ஜ் என்பது இந்திய மற்றும் திபெத்திய வரலாற்றின் படி மிகவும் பழமையான நகரமாகும். இந்நகரம் இமயமலையில் மறைந்துள்ளதாகவும் இந்நகரத்தில் சித்தர்களும் யோகிகளும் வாழ்ந்து வருவதாகவும் நம்பப்பட்டு வருகிறது. இந்த நகருக்கு சம்பலா, சங்கிரிலா, சித்தாஸ்ரம் என பலவிதமான பெயர்கள் உள்ளன. எனினும் இந்த நகரம் எங்குள்ளது என்பது இன்றுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. இந்நகரத்தை பற்றிய செய்திகள் பல புராணங்களிலும், வேதங்களிலும் காணப்படுகிறது. திபெத்திய புத்த மதத்தவர்கள் இந்நகரம் மத்திய ஆசியாவில் உள்ளதாக நம்புகின்றனர். மேலும் உலகம் பசியின் பிடியில் தவிக்கும்போது ஷம்பலாவின் 25வது அரசர் தோன்றி இந்த உலகத்தில் புது யுகத்தை ஏற்படுத்தி பாதுகாப்பார் என்றும் திபெத்திய புத்த மதத்தினரின் நூல்களில் கூறப்பட்டுள்ளது. பண்டைய புத்த நூல்களில் இந்த இடத்தை அடைவதற்கு சில வழிமுறைகள் சொல்லப்பட்டுள்ளன. எனினும் அவை புரிந்துகொள்ள முடியாதபடி உள்ளது. யோகிகளால் மட்டுமே அந்த இடத்தை அடைய முடியும் என்று கூறப்படுகிறது. இன்றைய அதி நவீன சாதனங்களாலும், ரேடாராலும் கூட கண்டுபிடிக்க முடியாத வகையில் மிகவும் புத்திசாலித்தனமாக இந்த நகரம் வடிவமைக்கப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது. முக்கியமாக கயான்கன்ஜியில் வசிப்பவர்கள் மரணத்தை வென்றவர்களாக இருப்பார்கள் என்றும் பண்டைய நூல்களில் கூறப்பட்டுள்ளது. சிவன் ஏன் கைலாயத்தை தேர்ந்தெடுத்தார்? ——————————————— ————————— 1.சப்தரிஷிகள் ஒவ்வொருவரும் ஞானத்தின் ஒவ்வொரு பரிமாணத்தையும் கிரகித்துவிட்டத ை உணர்ந்த ஆதியோகி, ஞானத்தின் ஏழு பரிமாணங்களையும் கிரகிக்கக் கூடிய மனிதன் கிடைக்காதபடியால்,தான் அறிந்தவற்றை எல்லாம் கைலாய மலையில் வைத்தார்.அதன்பின்,உலகின் மிகப்பெரிய ஆன்மீக நூலகமாக கைலாயம் மாறியது. 2.இந்தியாவின் யோகிகளும் ஞானிகளும்,மலை உச்சிகளைத் தேர்ந்தெடுத்து தங்கள் ஞானத்தை சக்தி வடிவில் பதித்து வைத்தனர். அவை யாரும் அணுகமுடியாத வகையில் இருக்காது.ஆனால் அடைவதற்கு பிரயத்தனப்பட வேண்டியிருக்கும். அப்படிப்பட்ட ஒரு இடம்தான் கைலாய மலை. 3.தென்னிந்தியாவின் மாபெரும் அகஸ்திய முனிவரும், தன் ஞானத்தை கைலாயத்தின் தென்முகத்தில் பதித்துச் சென்றதால், இன்றும் கைலாயத்தின் தென்முகப்பில் அகஸ்தியர் வாழ்கிறார். 4.கைலாயத்தை யாருமே உள்ளடக்கிக் கொள்ள முடியாது. அதிகமாக உள்வாங்கிக் கொள்ளலாம்,அங்கிருக்கும் ஞானம் மிக மிக அதிகம். கைலாயத்தை கிரகிப்பதற்கு ஒரே வழி,அதனுடன் கரைந்து போவதுதான். 5.உங்களுக்கு என்னவெல்லாம் தெரிய வேண்டுமோ, அவை அனைத்தும் கைலாயத்தில் உள்ளது.உங்களைப் பற்றி, பிறப்பு,வாழ்வு, முக்தி பற்றி எல்லாமே அங்கே இருக்கிறது.ஆன்மீக சாதகருக்கு, கைலாயத்தை தொடுவது, இப்புவியின் மூலசக்தியையே தொடுவதுபோல் புனிதமானது.இதுபோல் வேறு இடம் கிடையாது.

Share