இராமதேவர் சித்தர்

இராமதேவர் புலத்தியரிடம் சீடராக இருந்தவர் என்றும், விஷ்ணு குலத்தில் தோன்றிய பிராமணர் என்றும் பின் வீரம் மிகுந்த தேவர் குலத் தோன்றலாகவும் விளங்கிவர் என்றும், கருவூர்த் தேவர் கூறியுள்ளார்.

அந்தக் காலத்தில் நாகைத் துறைமுகத்திற்குக் கப்பல்கள் வந்து சென்றிடும். பெரும்பாலும் அரேபிய நாடுகளிலிருந்து வந்து செல்லும் கப்பல்களே அதிகம். அக்கப்பல்களில் வரும் அரேபியர்களைக் கண்டு இராம இராமதேவர் வியந்தார். தாமும் அவர்களுடன் பேசிப் பழக வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு ஏற்பட்டிருக்கக் கூடும்.

ஒரு நாள் வழக்கம் போல் அவர் தியானத்தில் ஆழ்ந்திருந்தார். அவர் கண் விழித்துப் பார்த்தபோது தாம் அரேபியாவில் இருப்பதை உணர்ந்தார். ‘தாம் எப்படி அங்கு வந்தடைந்தோம்’ என்பது அவருக்கே புரியவில்லை. அந்த எண்ணத்துடன் தியானத்தில் அமர்ந்தவர் சஞ்சார சமாதியில் ஆழ்ந்து மெக்காவுக்கு வந்து சேர்ந்து விட்டார்.

வறண்ட பாலைவனம். எங்கு பார்த்தாலும் மணல் பரப்பு. கண்ணுக்கு எட்டிய வரை மணல் பரப்புதான் தென் பட்டது. வெப்பம் மிகுந்திருந்தமயால் வியர்வை ஆறாகப் பெருகியது. இராமதேவர் விழித்தவாறே நின்று கொண்டிருந்தார். வெகு தொலைவில் ஒட்டகம் ஒன்று வருவதை அவர் கண்டார். அந்த ஒட்டகத்தின் பின் ஒன்று, இரண்டு என எண்ணற்ற ஒட்டகங்கள் வரிசையாக வந்தபடி இருந்தன.

பாலைவனத்தில் தன்னந்தனியாக நின்ற இராமதேவரைக் கண்டதும் அரேபியர்கள் தங்களது நாட்டிற்குள் எவனோ அத்துமீறி நுழைந்துள்ளான் என்று எண்ணி விரைந்து வந்து அவரைச் சூழ்ந்து கொண்டனர்.அவரும் அரேபி மொழியில் பேசிப் பழகினார். அவர்களது நோய்களையும் போக்கியருளினார். அவர்களுக்குள் உண்டான வழக்குகளைச் சிக்கல் ஏதுமின்றித் தீர்த்து வைத்தார்.

காலப்போக்கில்  சீடர்கள் பலர் சேர்ந்தனர். தன் சீடர்கள் மூலமாய் அரபு நாட்டிலிருந்து அரிய மூலிகைகளைக் கொண்டுவரச் செய்த யாகோபு அவற்றின் தன்மைகளை ஆராய்ந்தறிந்தார். கற்ப மூலிகைகளின் திறனை சோதித்தறிய தாம் சாமதியில் இருக்க விரும்பிய யாகோபு தம் விருப்பத்தைச் சீடர்களிடம் கூறினார். அவர்களிடம் , ”நான் சமாதியில் அமர்வேன். பத்தாண்டுகளுக்குப் பின் மீண்டும் உயிர் பெற்றெழுவேன்” என்றார். ”இது எப்படி சாத்தியம்?” என்று வியந்த சீடர்கள் அவரது கூற்றை நம்ப முடியாது தவித்தனர். ஆனாலும் தம் குருநாதருடைய வாக்கை அவர்கள் மீறவில்லை.

சமாதி நிலை கொள்வதற்கான இடம் தெரிவு செய்யப்பட்டு குழி தோண்டப்பட்டது. அக்குழிக்குள் நான்கு புறமும் சுவர்களும் எழுப்பப்பட்டன.

ஆண்டுகள் பத்தும் கழிந்தன.  உரைத்தது போன்றே அவர் சமாதியிலிருந்து மீண்டு வந்தார். தனது சீடன் சமாதி அருகிலேயே தனக்காகக் காத்திருந்தது கண்டு மனம் மகிழ்ந்தார். அவனுக்கு உபதேசங்கள் பலவற்றை உரைத்தருளினார். யாகோபு தான் சமாதிக்குள் சென்ற பின் நடந்தது என்ன என்று தனது சீடனிடம் கேட்டபோது அவன், “குருதேவ! தாங்கள் சமாதிக்குள் சென்ற பிறகு பெருங்கூட்டம் கூடியது. யாகோபு சாமாதிக்குப் சமாதிக்கு போய்விட்டார். இனி அவர் திரும்பவே மாட்டார். அவரது உடல் மண்ணோடு மண்ணாய்ப் போகும் ” என்று மிகவும் கேவலமாகப் பேசினர்.

“சீடனே! அவர்கள் பேசியதில் தவறு ஏதுமில்லை. இந்த மானிட தேகம் நிலையற்றது. காயகற்பம் உண்டு காயத்தைச் சித்தி செய்து நான்கு யுகங்கள் வாழ்ந்தாலும், பின் ஒரு நாள் இவ்வுடல் மண்ணோடு மண்ணாய்த்தான் போகும். நான் மீண்டும் சமாதியில் இருக்க விரும்புகிறேன்.இம்முறை முப்பது வருடங்கள் கழிந்த பின்னரே நான் வருவன் என்று கூறி சென்றார்.

சமாதியின் அருகேயே முப்பது ஆண்டுகள் சீடர்கள் காத்திருந்தனர். பின் சமாதியிலிருந்து யாகோபு வெளிவந்த்தும் அவரது தரிசனம் பெற்றனர். ஜோதி வடிவாய் வெளிவந்த யாகோபு தம் சீடர்களது குறைகளைப் போக்கியருளினார். ஆனால் அவருக்கு மெக்கா நகரத்து வாழ்க்கை அலுத்துப் போனது. ஜீவன்முக்தி அடைய தான் தமிழகத்திற்குத் திரும்பிச் சென்றிட வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு உண்டானத. சிறிது காலம் தம் சீடர்களுடன் தங்கி அவர்களுக்கு வேண்டிய நல்லுபதேசங்களைச் செய்தருளினார். பின் அவர் தன் சீடர்களிடம், “நான் மீண்டும் சமாதிக்குச் செல்கிறேன். இனி நான் திரும்பமாட்டேன்” என்றுரைத்தருளினார்.அவரது சீடர்கள் திடுக்கிட்டனர். அவரைப் பணிந்து தொழுது அழுதனர். ‘அவர் மீண்டும் சமாதிக்குச் செல்லக் கூடாது. தங்களுடனே இருக்க வேண்டும்.’ என்று மன்றாடினர். ஆனால் அவர்களிடம் , “அட மூடர்களே! அவ்வாறே நான் இருந்தாலும் நான் இருக்கும் காலம் வரையில் என்னுடனேயே நீங்களும் இருக்க இயலுமா? பிறந்தவர்கள் அனைவரும் இறந்தே தீர வேண்டும். இந்த உடம்புதான் அழியுமே தவிர ஆன்மா ஒருபோதும் அழியக்கூடியதல்ல. எனவே நீங்கள் வருந்த வேண்டாம். நான் என்றும் உங்களுடனேயே இருப்பதாக எண்ணுங்கள்” என்று கூறிவிட்டு விடைபெற்று மீண்டும் சமாதிக்குள் புகுந்தார்.

மெக்காவில் சமாதி கொண்டதாக சிலர் கூறுவர். ஆனால் அவர் சமாதியுள் இருந்து வெளிப்பட்டுத் தமிழகம் வந்தவுடன் சதுரகிரியில் சிறிது காலம் தங்கியிருந்தார். தாம் மெக்காவில் இருந்தபோது அரபி மொழியில் எழுதிய மருத்துவ நூல்களைத் தமிழில் இயற்றினார். பின் சதுரகிரி வனத்தில் சிலகாலம் தங்கிய யாகோபு என்ற இராமதேவர் பின் அழகர் மலைக்கு வந்து அங்கேயே சமாதி அடைந்தருளினார்.

தமிழகத்திற்கு வந்து தம் ஆசிரமத்திற்கு வந்து சேர்ந்ததுமே அவர் மீண்டும் இராமதேவராகவே மாறினார் என்றும், அதனாலேயே அவர் அழகர்மலையில் சமாதியடைந்தார் என்றும் கூறப்படுகிறது.

 

 

Share