அட்டாங்க யோகம்

அட்டாங்க யோகம்

அட்டாங்க யோகம் – இயமம், நியமம், ஆதனம், பிராணாயாமம், பிரத்தியாகாரம், தாரணை, தியானம், சமாதி என்னும் எட்டு உறுப்புக்களை உடையது அட்டாங்க யோகம் . இவை இறைவனை அடைவதற்கான வழிகள் ஆகும்.

  • இயமம் – கொல்லாமை, வாய்மை, கள்ளாமை, வெஃகாமை  புலன் அடக்கம் என்பனவாம்.
  • நியமம் – தவம், மனத்தூய்மை, வாய்மை, தத்துவ நூலோர்தல், பெற்றது கொண்டு மகிழ்தல், தெய்வம் வழிபடல்.
  • ஆதனம் – உடலைப் பல்வேறு கோணங்களில் நிறுத்தி, பயிற்சி செய்தல்.( ஆசனம்)
  • பிராணாயாமம் – உயிர்க்கும் உயிர் மூச்சைக் கட்டுக்குள் கொண்டுவருதல். இதுவும் இரண்டு வகைப்படும். மந்திரமில்லாது நிறுத்தல் ஒருவகை. பிரணவம் காயத்திரி முதலான மந்திரத்தைச் சொல்லிக்கொண்டு நிறுத்தல்.
  • பிராத்தியாகாரம் – மனமானது, புலன்கள் வாயிலாக விஷயாதிகளில் சென்று பற்றி உழலாவண்ணம் அடக்குதல்.
  • தாரணை – உந்தி,இதயம்,உச்சி என்னும் மூன்றிடத்தும் உள்ளத்தை நிலைநிறுத்தல்;
  • தியானம் – கண்களைத் திறந்தும் திறவாமலும் வைத்துக்கொண்டு சிவனை உள்நோக்குதல்
  • சமாதி -பரம்பொருளுடன் ஒன்றும் நிலையையே, சமாதி நிலை என்கிறோம்.

 

 

 

Share