1911915_1703881816494730_8179761646027423639_n

மனோவசிய மந்திரம்
——————-
மனம் ஒரு குதிரை அதில் எப்பொழுதும்
எதாவது எண்ணங்கள் ஓடிக்கொண்டே
இருக்கும்.

அப்படி எண்ண ஓட்டத்தோடு ஓடும் மனதை
ஒரு நிலையில் நிறுத்தினால்
எண்ணற்ற காரியங்களை சாதிக்க
முடியம்.அதற்கான மந்திரத்தை இன்றைய
பதிவில் காண்போம்.

எந்த மந்திரம் செபித்தாலும் எக்காரியம்
செய்தாலும் மன ஓர் நிலையோடு மன ஒன்றி
செய்தால்தான் சித்தி உண்டாகும்.

மனமது செம்மையானால் மந்திரம் செபிக்க
வேண்டாம் என்ற
அகத்தியரின் வாக்குபடி மனதில் பல
எண்ணங்கள் ஓடாமல் அதை
ஓர்நிலைப்படுத்தவும்.

மனதை நமது கட்டுப்பாட்டில்
கொண்டுவரவும் இம்மந்திரம் உதவும்.

சகலவசியங்களுக்கும் மூலமாய் இருப்பது
மனோவசியம் ஆகும்.

முதலில் மனதை எவன் வசியமாக்குகிறானோ
அவனுக்கு சகல மந்திரங்களும் சித்தியாகும்
சகல தேவதைகளும் வசமாகும்.

தன்னை ஆளக்கற்றுக்கொண்டவன் தரணியை
ஆள்வான்.

தன் மனதை வசியம் செய்பவன் சகலத்தையும்
வசியம் செய்வான்.

ஓம் மருமலர் வாசினி
சர்வஜன ரட்சிணி கௌரிபகவதி
மனோவசியம் குரு குரு சுவாகா.

இம்மந்திரத்தை 108 உரு செபித்துவர மனம்
அடங்கி வசியமாகும்.

மனதில் தேவையற்ற எண்ணங்கள் ஓடாமல்
மனம் ஓர் நிலைப்படும்.

எந்த மந்திரம் செபிக்கும் முன்பும்
இம்மந்திரத்தை 16 உரு செபிக்க
மன ஓர்நிலை ஏற்பட்டு மந்திரம் விரைவில்
சித்தியாகும்.

மனம் ஓர் நிலைப்படாமல் எக்காரியம்
செய்தாலும் அது பலிக்காமல்
போய்விடும் என்பதை கவனத்தில்
கொள்ளவும்.

Share