அகதியர் வைதியசதகம் 4

அகதியர் வைதியசதகம் 4

அகஸ்தியர் வைத்திய சதகம் – 4

பாரப்பா பூதமஞ்சு மண் நீர் தேயு பரிவாயு ஆகாசமஞ்சினாலே
சேரப்பா சடமாச்சு மண்ணின் கூறு செறி மயிர் தோல் எலும்பு இறைச்சி நரம்பஞ்சாகும்
நேரப்பா அப்புவின் கூறு உதிரம் மச்சை நீர் மூளை சுக்கிலமோடஞ்சதாகும்
காரப்பா தீக்கூறு பயம ஆங்காரம் கடும் சோம்புநித்திரை மைதுனங்கள் அஞ்சே.

பொருள் : பூதம் ஐந்து என்னும் மண், தண்ணீர், தீ, காற்று, ஆகாசம் இவைகளால் நமது உடம்பு உருவாக்கப்பட்டுள்ளது. இதில் மண்ணினுடைய கூறு எவைகள் எனில் மயிர், தோல், எலும்பு, தசை மற்றும் நரம்பு என்னும் 5 பொருள்கள் ஆகும். தண்ணீரினுடைய கூறு எவை எனில் இரத்தம், மச்சை, நிணநீர்கள், மூளை, சுக்கிலம் என்னும் ஐந்து பொருள்கள் ஆகும். தீயினுடைய கூறு பயம், அகங்காரம்,சோம்பல், தூக்கம், பெண் போகம் எனும் ஐந்து கூறுகள் ஆகும்.

Share