அகதியர் வைதிய சதகம் 6

அகதியர் வைதிய சதகம் 6

அகத்தியர் வைத்திய சதகம் – 6

உண்டான பொறியதுவே தோத்திரம் தொக்கு உறுதியுள்ள சட்சு சிங்ங[வை ஆக்கிராணம்
கண்டாயோ செவி உடம்பு நயனம் நாக்கு கந்தமுறு மூக்குமிவை தானஞ்சாகும்
விண்டாயோ புலனைந்து விள்ளக்கேளு விரிந்த சத்த பரிசமுடன் ரூப ரெசகெந்தம்
திண்டாடும் சத்தமது செவியில் கேட்கும் தேகமது சுகமறியும் பரிசமாமே.(6)

பொருள் : பொறி 5 எவைகள் எனில் தோத்திரம், தொக்கு, சட்சு,சிங்குவை, ஆக்கிறாணம் ஆகும். அதாவது தோத்திரம் என்பது செவி, தொக்கு என்பது உடம்பு, சட்சு என்பது கண், சிங்குவை என்பது நாக்கு, ஆக்கிறாணம் என்பது மூக்கு என்பன ஆகும். புலன் ஐந்து எவை எனில் சத்தம், பரிசம், ரூபம், ரெசம், கந்தம். அதாவது சத்தம் என்பது செவியில் கேட்கும் செயல், பரிசம் எனபது உடம்பின் தோலில் அறியும் சுகம்.

Share