சைவம் கூறும் சிவசிந்தனை பாகம்1

சைவம் கூறும் சிவசிந்தனை பாகம்1

சிவாய நம.

திருச்சிற்றம்பலம்

*இறைவன்*

இறைவனின் பொது இயல்பு.
உருவமில்லாமல் தன்னியல்பில் உள்ள பரம்பொருளின் பெயர் சிவம் என சைவம் கூறுகிறது.

உருவமில்லாத பரம்பொருள், ஆணவமலத்தில் கட்டுண்ட இந்த உயிர்களை உய்விக்கும் பொருட்டு மாயையாகிய தனது பரிக்கிரக சக்திக்குள் தன்னை சுருக்கிக் கொண்டு, தன் தன்மையில் இருந்து மாயைக்குள் இறங்கி வந்து உயிர்களுக்காக தனு கரண புவன போகங்களை படைக்கிறார்.

உதாரணம்.

சேற்றில் விழுந்த தனது குழந்தையை, தானே சேற்றில் இறங்கி காப்பாற்றி அந்த குழந்தையை சுத்தம் செய்யும் தாயை போல… தாயை விட மேலாக இந்த உயிர்களை காக்க அவன் அருளை வாரி வாரி வழங்கிக் கொண்டே இருக்கிறார்.
இப்படி மாயைக்குள் இறங்கி வரும் பரம் பொருள். மூன்று வகையில் நமக்கு அருள் புரிகிறார்.

அருவம்
உருவம்
அருவுருவம்

அருவம் என்பது கண்ணுக்கு தெரியாமல் எல்லா உயிர்களுக்குள்ளும் நுண்ணியனாய் இருக்கும் இயல்பு.

அருவம் என்றால்

லிங்க சொரூபமாக ஆலையங்களிலே எழ்ந்தருளிய இயல்பு. சதாசிவ தத்துவத்தில் இந்த வடிவத்தை இறைவன் எடுக்கிறார்.

உருவம் இந்த உயிர்கள் இயல்பில் அவர்களது வாழ்வியலுக்கு தேவையானவற்றை வழங்கவும் வழிபாடு செய்ய ஏதுவாக இருக்கவும் தன்னை உருவத்துள் கட்டுப்படுத்தி அமைதி சொரூபமாக ஆலையங்களில் வீற்றிருக்கிறார். நான்காம் தத்துவத்தில் 25 வடிவங்களை சிவ பெருமான் எடுக்கிறார்.
இவ்வாறு உருவமெடுப்பதன் நோக்கம் என்ன. இவைகளை எல்லாம் எடுத்து தன்னை முதலில் தயார் படுத்துவதன் காரணம் என்ன. இப்படிப்பட்ட உருவ அருவ அருவுருவங்களை எடுத்து தன்னை முதலில் தயார் படுத்திய பிறகு தான் மற்ற தத்துவங்களை இறைவன் தோற்றுவிக்கிறான். அவன் கருணை யாருக்கு வரும். ஏன் என்பதை நாளை பார்க்கலாம்.

சிவாய நம.

திருச்சிற்றம்பலம்

Share