அகஸ்தியர் வைத்திய சதகம் – 22

அகஸ்தியர் வைத்திய சதகம் – 22

அகஸ்தியர் வைத்திய சதகம் – 22*

குறிப்பான விசுத்தி கண்டத்தானமாகும் கூண்ட புருவமையம் ஆக்கினையாகும்
பிரிப்பான ஆதாரம் ஆறும் சொன்னோம் பேறான மண்டலந்தான் மூன்றும் கேளு
பொறுப்பான அக்கினி மண்டலந்தான் ஒன்று புகழான ஆதித்த மண்டலந்தான் ஒன்று
முறிப்பான சந்திர மண்டலத்தினோடே மூன்றாச்சு அக்கினியும் மூலத்தாச்சு.

*பொருள் :* கண்ட தானத்தில் (தொண்டைக் குழியில்) விசுத்தியும்,புருவ மையத்தில் ஆக்கினையும், ஆக ஆறு ஆதாரங்களும் அமைந்துள்ளது. இனி மூன்று மண்டலங்களைப் பற்றி அறிவோமேயானால் அக்கினி மண்டலம், ஆதித்த மண்டலம்,சந்திரமண்டலம் ஆகும். அக்கினி மண்டலத்தின் இருப்பிடம் மூலம்.
நம் உடம்பில் 6 ஆதார சக்கரங்களும், அக்னி, சூரிய, சந்திர என 3 மண்டலங்களும் இருக்கிறது. அதன் இருப்பிடமும் கூறப்பட்டுள்ளது.
6 சக்கரம் உடம்பிலும் 4 சக்கரம் வெளியிலும். அந்த ஆறு சக்கரங்களை மேலேற்றி இயக்கினால் போதும் மீத 4 சக்கரம் நம்மை தாமே இயக்கிவிடும்.

Share