அகஸ்தியர் வைத்திய சதகம் – 23

அகஸ்தியர் வைத்திய சதகம் – 23

அகஸ்தியர் வைத்திய சதகம் – 23

மூலமதில் அக்கினி மண்டலந்தான் சேர்ந்து முனிந்திளகி நாபி மட்டு முயற்சி செய்வான்
சீலமுறும் ஆதித்தியமண்டலந்தான் நெஞ்சில்சேர்ந்து கண்டதானம் மட்டும் திறமை செய்யும்
கோலமுறும் சந்திரமண்டலந்தான் நெற்றி குறிப்பறி இவை மலம் மூன்றும் கூறக்கேளு
சாலவே ஆணுவம் காமியமும் மாய்கை தயவான ஆணுவத்தின் தகைமை கேளே.

*பொருள் :* மூலத்தில் அமைந்திருக்கும் அக்கினி மண்டலம் சேர்ந்து இளகி நாபி வரை தன் கடமைகளைச் செய்யும். ஆதித்த மண்டலம் நெஞ்சிலிருந்து கண்டத் தானம் வரை அமர்ந்திருந்து தன் கடமைகளைச் செய்யும். சந்திர மண்டலம் நெற்றியில் இருந்து கொண்டு தன் வேலைகளைச் செய்யும். மும்மலங்கள் எவை எனில் ஆணவம்,காமியம், மாய்கை இவைகள் ஆகும்.

Share