அகத்தியர் வைத்திய சதகம் – 24

அகத்தியர் வைத்திய சதகம் – 24

அகத்தியர் வைத்திய சதகம் – 24

ஆணுவந்தான் உடம்பை நானென்றிருக்கை அருங்காமியம் கண்டதெல்லாம் ஆசை கொள்ளல்
நீண் உடலில் மாய்கையது தனக்குவாற நிலை தானே அறியாமல் கோபம் கொள்ளல்
பூணுகின்ற தோசம் மூன்று அதனைக்கேளு புகழ் வாத பித்த சிலேற்பனமே மூன்றில்
பேணுகின்ற வாதமது வாய்வின் கோபம் பித்தமது அக்கினியின் கோபம் தானே.

*பொருள் :* உடம்பை நான் என்னும் அகம்பாவத்துடன் இருக்கச் செய்வது ஆகும். காமியம் எது எனில் கண்ட பொருட்களை எல்லாம் ஆசை கொள்ளுதல் ஆகும். மாய்கை என்பது தன் நிலை அறியாமல் கோபம் கொள்ளுதல், தோசம் மூன்று எவை எனில் வாதம், பித்தம்,சிலேற்பனம் ஆகும். வாதம் எனது வாய்வின் கோபம், பித்தம் என்பது அக்கினியின் கோபம் ஆகும்.

Share