அகஸ்தியர் வைத்திய சதகம் – 30
*அகஸ்தியர் வைத்திய சதகம் – 30*
காணப்பா மூலமதில் துரியாதீதம் கலந்து நிற்கும் அஞ்சோடே முப்பத்தாறும்
தோணப்பாமுன்மொழிந்த அறுபதோடே சொன்னோமே தத்துவங்கள் தொண்ணூற்றாறாய்
ஊணப்பா உடலாச்சு உயிருமாச்சு உயிர்போனால் பிணமாச்சு உயிர் போம் முன்னே
பூணப்பா வாதபித்த சேத்துமத்தால் பூண்டெடுத்த தேக வளம் புகலுவேனே.
*பொருள் :* மூலாதாரத்தில் துரியாதீதம் நிற்கும், இவைகள் 36-ம், முன் சொன்ன 60-ம் சேர்த்து 96 தத்துவங்கள் ஆகும். ஆக உடலாகி, உயிராகி,இவ்வுயுர் போனால் பிணமும் ஆகும். உயிர் போவதற்கு முன்னே வாத பித்த சேத்துமத்தால் பூண்ட உடல் கூறை நாம் காணலாம்.
Share
வெப் தளம் சிறப்பாக அமைத்துள்ளீர்கள் ராம். நிறைய சங்கதிகளை களஞ்சியமாக சேர்த்து வருகிறீர்கள். பாராட்டுகள்!
ஓம் சிவாயநம. நன்றி