சிவசிந்தனை பாகம்-9

சிவசிந்தனை பாகம்-9

சிவாய நம.

திருச்சிற்றம்பலம்

*நாற்பாதங்கள்*

ஆச்சார்ய தீக்ஷை
முன்னம் கூறிய அனைத்து தீக்ஷா விதிகளும் உண்மையாய் கடைபிடித்து இறைவனை உணர்ந்து உணர்வுகளை துறந்து முழுமையாக தன்னை இறைவனிடம் ஒப்படைத்து, தான் உணர்ந்ததை மற்றவர்க்கும் தீக்ஷை மூலம் கொடுத்து பிற உயிர்களையும் முக்திக்கு இட்டு செல்லும் தகுதியை எட்டிய சீடனுக்கு அவரது குரு ஆச்சாரிய தீக்ஷை வழங்கி அபிஷேகங்கள் நடத்தி அடுத்த குரு என்பதை அறிவிப்பார்.

இது அனைத்தும் ஒரு பிறவியில் நிகழ்ந்து விட வேண்டும் என்பதில்லை.
கிரியையிற் சரியை – பூசைப் பொருட்களைத் திரட்டல்.

கிரியையிற் கிரியை – புறத்தில் பூசித்தல்.

கிரியையில் யோகம் – அகத்தில் பூசித்தல்.

கிரியையில் ஞானம் – மேற்கூறிய கிரியைகளால் ஓர் அனுபவம் வாய்க்கப் பெறுதல்.
என்ன அனுபவம்.

இங்கே கவனிக்க இவைகளை அக பூஜை செய்யும் போது பிராணாயாமம் செய்கிறார்களே. அது அடுத்த பாதமான யோகத்திற்கு வழி வகுக்கும்.
சரியையாளர்கள் வழிபடுவது — உருவம்

கிரியையாளர்கள் வழிபடுவது — அருவுருவம்

படிநிலைகள் புரியும் என எண்ணுகிறேன்.

அடுத்த பதிவில் யோகத்தை பற்றி காண்போம்.

சிவாய நம

திருச்சிற்றம்பலம்

Share