திருமந்திரம் – 203

திருமந்திரம் – 203

*திருமந்திரம் – 203*

ஐந்து தலைப்பறி யாறு சடையுள
சந்தவை முப்பது சார்வு பதினெட்டுப்
பந்தலும் ஒன்பது பந்தி பதினைந்து
வெந்து கிடந்தது மேலறி யோமே.

*பொருள்:* ஐந்து தலையாகிய ஐம்பொறிகளும், ஆறு பறியாகிய மூலாதார முதலிய ஆறு ஆதாரங்களும், சடையாகிய இடைவெளியின் கண் உள்ள சந்துகள் முப்பதும் உள்ளன. நுண்ணுடம்பு எட்டு; வாயுக்கள் பத்து ஆகப் பதினெட்டு. ஒன்பது தொளைகள். பூதமைந்து, தொழிற் கருவி ஐந்து, உணவுடம்பு முதலிய உடம்பு ஐந்து ஆகப் பதினைந்து. இவையனைத்தும் வெந்து நீறாகிக் கிடந்தன. மேல் விளைவினை எவரும் உள்ளவாறு அறியார். உணவுடம்பு முதலிய ஐந்தும் வருமாறு; உணவுடம்பு, வளிவுடம்பு, மனவுடம்பு, அறிவுடம்பு, இன்பவுடம்பு என்பனவாம். இவற்றை முறையே அன்னமய கோசம், பிராண மயகோசம், மனோமயகோசம், விஞ்ஞானமயகோசம், ஆனந்தமயகோசம் என்பர்.

Share