அகஸ்தியர் வைத்திய சதகம் – 37

அகஸ்தியர் வைத்திய சதகம் – 37

*அகஸ்தியர் வைத்திய சதகம் – 37*

தானான பித்தம் பின்கலையைப் பற்றி தயவான பிராண வாய்வு அதனைச் சேர்ந்து

ஊனான நீர்ப்பையில் அணுகி மூலத்து எழுந்து அக்கினியை உறவு செய்து

மானே கேள் இருதயத்தில் இருப்புமாகி மயலாகி நினைவாகி மறப்புமாகி

கோனான சிரந்தனிலே இரக்கமாகி கொண்டு நின்ற பித்த நிலை கூறினோமே.

*பொருள் :* பித்த நாடி பின் கலையைப் பற்றி பிராண வாயுவை சேர்ந்து சிறுநீர்ப் பையை அணுகி மூலத்தில் எழுந்து சூடை எழுப்பி இருதயத்தில் இருந்து நினைவு, தூக்கம், மறப்பு இச்செயல்களை செய்து தலைக்கு இரக்கமாக நிற்பது பித்தத்தின் நிலை ஆகும்.

Share