அகஸ்தியர் வைத்திய சதகம் – 38

அகஸ்தியர் வைத்திய சதகம் – 38

*அகஸ்தியர் வைத்திய சதகம் – 38*

கூறினோம் சிலேற்பனமது சமானவாய்வை குழுமியே சுழிமுயையைப் பற்றி
சீறியே சிரசில் ஆக்கினையைச் சேர்ந்து சிங்ங[வை உண்ணாக்கு நிணம் மச்சை ரத்தம்
மீறியே நீர்கோழை நரம்பெலும்பில் மேவியதோர் மூளை பெருங்குடலில் கண்ணில்
தேறியதோர் பொருத்திடங்கள் எல்லாம் சேர்ந்து சிலேற்பனமது வீற்றிருக்கும் தடம் கண்டாயே.

*பொருள் :* சிலேற்பனமானது சமான வாய்வில் சேர்ந்து சுழிமுனையைப் பற்றி தலையில் ஆக்கினையில் இருந்து நாக்கு, உண்ணாக்கு,நிணநீர்கள், மச்சை, இரத்தம், நீர், கோழை, நரம்பு, மூளை, பெருங்குடல்,கண் பொருத்துகள் தோறும் சேர்ந்து சிலேற்பனமானது வீற்றிருக்கும்.

Share