அகஸ்தியர் வைத்திய சதகம் – 39

அகஸ்தியர் வைத்திய சதகம் – 39

*அகஸ்தியர் வைத்திய சதகம் – 39*

கண்டாயோ வாதத்தால் எழுந்த தேகம் கட்டிமையாய் தடித்திருக்கும் கருமை செம்மை
வண்டாரும் குழலாள் மேல் அற்ப ஆசை வாய்வுமிகும் போகமுறும் மலச்சிக்கல் தான்;
உண்டாலோ அற்பஉண்டி எரிப்போடுஉண்ணும் உறுந்தாது குறைச்சல் உடம்பு உளைவுசீ தம்
பண்டோர்கள் நூல்முறையே நடக்கல் போதம் பாங்கான அறிவு இசைத்தல் திண்ணம் தானே.

*பொருள் :* வாத உடல் கூறு உடையவர்கள் உடல் பலமாகவும்,தடித்தும், கருமை மற்றும் செம்மை நிறம் கொண்டவர்களாகவும் காணப்படுவார்கள். பெண்கள் மீது குறைந்த ஆசை உடையவர்களாகவும்,வாய்வு மிகுந்தவர்களாகவும், போகப் பிரியர்களாகவும், மலச்சிக்கல் உடையவர்களாகவும், மிகக் குறைந்த உணவு எரிப்பு சுவையோடு உண்பவர்களாகவும், தாது குறைந்தவர்களாகவும், உடம்பு வலி, குளிர்ச்சி உடையவர்களாகவும், முன்னோர்கள் கூறிய நூல் முறைகளின் படி நடக்க கூடியவர்களாகவும், நல்ல அறிஞர்களாகவும் இருப்பார்கள்.

Share