அகஸ்தியர் வைத்திய சதகம் – 41

அகஸ்தியர் வைத்திய சதகம் – 41

*அகஸ்தியர் வைத்திய சதகம் – 41*
தானமுற வாதத்தில் பித்தம் சேர்ந்தால் சரீர குறி மெலிவு நிறம் கறுப்பே ஆகும்

ஈனமுற பொய்யுடனே மெய்யும்சொல்லும் எரிப்புடனே துவர்ப்புஅதிகம் உண்ணவேண்டும்

கான மருங்குழலாள் மேல் மிகுந்த ஆசை கடிந்த மொழி முன் கோபம் கசடாம் உள்ளம்

ஆன உடல் நெடிதலது குறுகலாகும் அறிவு குறைந்துக்குமென அறியலாமே.

*பொருள் :* வாதத்தில் பித்தம் சேர்ந்த உடல் கூறு எது எனில் உடல் மெலிவாகவும் கறுப்பு நிறத்திலும் காணப்படும். பொய்யும், மெய்யும் கலந்து பேசும். எரிப்பு, துவர்ப்பு இந்த சுவைகளில் அதிக ஆசை காணும். பெண்கள் மீது மிகுந்த ஆசை காணும். கடிந்து பேசுதல், முன் கோபம்,கசடான உள்ளம் உடையவர்களாக இருப்பார். உடல் ஒல்லியாக குட்டையாகவும், குறைந்த அறிவு உடையவர்களாகவும் இருப்பர்.

Share