அகஸ்தியர் வைத்திய சதகம் – 42

அகஸ்தியர் வைத்திய சதகம் – 42

*அகஸ்தியர் வைத்திய சதகம் – 42*

அறிவான பித்தத்தால் எடுத்த தேகம் அறமெலிவு நிறம் வெள்ளை அரிவையோடு

பிறியாத சுகலீலை அற்பஉண்டி பெரும்புளிப்போடு உணவு கொள்ளல் பெரியோர் தம்மை

குறியாக உபசாரம் பண்ணல் புத்தி குழம்பி பின் தேறல் கலை ஞான போதம்

நெறியாக கற்றறிவு சொல்லல் வீரம் நிலைப்புமதி இளக்கமதி உறவுமாமே.

*பொருள் :* பித்தத்தால் எடுத்த உடல் கூறு எது எனில் மெலிந்த வெள்ளை நிறமுடைய உடையவர்களாக இருப்பர். மங்கையரோடு எப்போதும் சம்போகம் செய்பவர்களாகவும், மிகவும் குறைந்த அளவு உணவு, புளிப்பு சுவையோடு உட்கொள்பவர்களாகவும்,பெரியவர்களை மதிப்பவர்களாகவும், புத்தி குழம்பி பின் தேறுபவர்களாகவும், நல்ல கலை ஞான அறிவு உடையவர்களாகவும், கல்விஅறிவு, வீரம் உடையவர்களாகவும்,நல்ல புத்திசாலிகளாகவும், ஏராளமான உறவினர்களோடு உறவு வைத்திருப்பவர்களாகவும் இருப்பார்கள்.

Share