அகஸ்தியர் வைத்திய சதகம் – 44

அகஸ்தியர் வைத்திய சதகம் – 44

*அகஸ்தியர் வைத்திய சதகம் – 44*
சொல்லுகின்ற பித்தமதில் சேத்துமம் சேர்ந்த சொரூபமது செண்பகப்பூ நிறமேயாகும்

வல்லியர்மேல் மிக ஆசை புளிப்பு இனிப்பு உண்ணும் வாக்கு நயம் குரலோசை மனத்திடமே ஆகும்

நல்லறிவு கற்கும் முதியோரைப் பேணும் நடுநிலையே சொல்லும்அதிக யோகமுண்டாம்

பல்லுயிர்க்கும் தான் இரங்கி கிருபை செய்யும் பாங்கான தருமம் மிகுந்திருக்கும் தானே.

*பொருள் :* பித்தத்தில் சேத்துமம் சேர்ந்த உடல் கூறு ஏதெனில் உருவம் செண்பகப்பூ நிறத்தில் இருக்கும். பெண்களிடம் ஆசை உடையவராகவும், புளிப்பு, இனிப்பு சுவைகளை அதிகம் விரும்புவராகவும், சொல் வன்மை, இனிய குரல், திட மனது, அறிவு,கல்வி இவைகள் உடையவர்களாகவும், முதியோரை பேணுபவராகவும்,நடுநிலை உடையவர்களாகவும், யோக வானாகவும், பல உயிர்களுக்கும் இரங்கி கிருபை செய்பவர்களாகவும், தர்ம சீலர்களாகவும் இருப்பர்.

Share