அகஸ்தியர் வைத்திய சதகம் – 45

அகஸ்தியர் வைத்திய சதகம் – 45

*அகஸ்தியர் வைத்திய சதகம் – 45*

தானான சிலேற்பனத்தால் எடுத்ததேகம் தனித்திருக்கும் மனம்பிலக்கும் சரீரம்வியர்க்கும்

மானார் மேல் மயலாகும் சிவந்தமேனி வானிடிபோல் குரலாகும் வணக்கமாகும்

ஆனாலோ பொய்யதை மெய்யாயுரைக்கும் அறப்பசிக்கு தித்திப்போடுஉண்ணும் கை கால்

ஊனாகச் சிவந்திருக்கும் காசம் காய்ச்சல் உண்டாகுமென்று முன்னோர் உரைத்தவாறே.

*பொருள் :* சிலேற்பன உடல் கூறு ஏதெனில் சாதாரணமாக இருக்கும். திட மனது உடையவனாகவும், எப்போதும் வியர்க்க கூடிய உடல் வாகு உடையவனாகவும், பெண்களிடம் அதிகம் விருப்பம் உடையவனாகவும்,சிவந்த மேனியனாகவும், உரத்த குரலை உடையவனாகவும்,எல்லோரை வணங்குபவனாகவும், பொய்யை மெய்யாய் உரைப்பவனாகவும், பசிக்கு இனிப்பான உணவுப் பொருட்களை உண்பவனாகவும், கை கால்கள் சிவந்த நிறமுடையவனாகவும், காசம்,காய்ச்சல் போன்ற நோய்களை உடையவனாகவும் இருப்பான்.

Share