அகஸ்தியர் வைத்திய சதகம் – 47

அகஸ்தியர் வைத்திய சதகம் – 47

*அகஸ்தியர் வைத்திய சதகம் – 47*

குறிக்கின்ற சிலேற்பனத்தில் வாதம் பற்றி கொண்டெழுந்த தேகமது தூலகாயம்

பிறிக்கின்ற உடல்கருமை செம்மையாகும் பெருத்தகுடல் உண்டிபுளிப்பு எரிப்போடு உண்ணல்

மறிக்கின்ற பெண்ணாசை வீரம் யோகம் வாழ்க்கை விதரண வித்தை மறைநூல் ஆய்தல்

நெறிகொண்ட பெரியோரை சேர்தல் அன்பு நேசமுறும் சிலேற்பனத்தில் வாதமாமே

*பொருள் :* சிலேற்பன வாத உடல் கூறு எது எனில் பெரிய உடல் வாகு உடையவராகவும், கறுப்பு மற்றும் செம்மை நிறம் உடையவராகவும், அதிகம் உணவு உண்பவராகவும், புளிப்பு மற்றும் எரிப்பு சுவையோடு உண்பவராகவும், பெண்ணாசை, வீரம், யோகம் உடையவராகவும், பல கலைகள் அறிந்தவராகவும், மறை நூல்களை ஆராய்பவராகவும், சிறந்த மனிதர்களோடு அன்பு, நேசம் இவைகள் உடையவராகவும் இருப்பார்.

Share