அகஸ்தியர் வைத்திய சதகம் – 48

அகஸ்தியர் வைத்திய சதகம் – 48

*அகஸ்தியர் வைத்திய சதகம் – 48*

வாதமெனும் நாடியது தோன்றில் சீதம் மந்தமொடு வயிறுபொருமல் திரட்சை வாய்வு

சீதமுறும் கிறாணி மகோதரம் நீராம்பல் திகழ்வாய்வு சூலை வலி கடுப்பு தீரை

நீதமுறும் கிருமி குன்மம் அண்டவாதம் நிலையும் நீர் கிரிச்சனங்கள் தந்துமேகம்

பேதகமாம் உதரபிணி மூலரோகம் பேச வெகு பிணிகளுக்கும் பொருளதாமே.

*பொருள் :* வாத நாடி அதிகம் துடித்தால் சீதம், வயிறு மந்தம், வயிறு பொருமல், திரட்சை வாய்வு, கிறாணி, மகோதரம், நீராம்பல், வாய்வு,சூலை, வலி, கடுப்பு, தீரை, கிருமி, குன்மம், அண்ட வாதம், கிரிச்சனம்,தந்தி மேகம், வயிறு வியாதி, மூல நோய் போன்ற நோய்கள் காணலாம்.

Share