திருமந்திரம் – 1156

திருமந்திரம் – 1156

*திருமந்திரம் – 1156*

பத்து முகமுடை யாள்நம் பராசத்தி
வைத்தனள் ஆறங்க நாலுடன் றான்வேதம்
ஒத்தனள் ஆதாரம் ஒன்றுடன் ஓங்கியே
நித்தமாய் நின்றாளெம் நேரிழை கூறே.

*பொருள்:* சிவபெருமானது கூறாகத் திகழும் திருவருள் அம்மை, புலம் பத்தாதலின் பத்துத் திருமுகங்களையுடையவள். அவள் பேரருள் என்னும் பெயருடைய பராசத்தியாவள். அவளே திருநான்மறையும் கருவியாம் ஆறு உறுப்புக்களும் ஆருயிர் உய்ய ஓதுவித்தனள். அவளே அத்தனாகிய சிவனுக்கு அருள், திருமேனியாதலால் தாங்குவதாகிய ஆதாரம் ஆகின்றனள். ஒடுங்கும்போது அருள் அத்தனுள் ஒடுங்குதலால் தாங்கப்படுவதாகின்றது. இம்முறையாகத் தானதுவாம் தன்மையில் சிவனும் அருளும் என்றும் பிரிப்பின்றிநின்று அருள்செய்வர்.

Share