அகஸ்தியர் வைத்திய சதகம் – 56

அகஸ்தியர் வைத்திய சதகம் – 56

 

_சிலேற்பனத்தில் வாதநாடி குறிக்குணம்_

கண்டாயோ சிலேற்பனத்தில் வாதநாடி கலர்ந்திடுகில் வயிறுபொருமல் கனத்த வீக்கம்

உண்டாலோ ஓங்காளம் சர்த்தி விக்கல் உறுதிரட்சை வாய்வு வலி சன்னி தோசம்

விண்டாலோ இழைப்பிருமல் சோகை பாண்டு விசபாகம் விச சூலை பக்கவாதம்
திண்டாடும் நாசிகாபீடம் கக்கல் சிரநோய்கள் பலதும் வந்து சிறக்கும் தானே.

*பொருள் :* சிலேற்பனத்தில் வாத நாடி சேர்ந்த குணம் ஏதெனில் வயிறு பொருமல், உடல் வீக்கம், குமட்டல், வாந்தி, விக்கல், திரட்சை வாய்வு,வலி, சன்னி, இளைப்பிருமல், சோகை, பாண்டு, விச பாகம், விச சூலை,பக்கவாதம், நாசிகா பீடம், தலை நோய் போன்ற பல நோய்கள் காணலாம்.

Share