திருமந்திரம் – 142

திருமந்திரம் – 142

இருந்தேன்இக் காயத்தே எண்ணிலி கோடி

இருந்தேன் இராப்பகல் அற்ற இடத்தே
இருந்தேன் இமையவர் ஏத்தும் பதத்தே
இருந்தேன் என்நந்தி இணையடிக் கீழே.
அருளால் தரப்பெற்று நடமாடுந் திருக்கோவிலாகிய இவ்வுடம்பகத்தே அளவிலாக் காலம் சிவன் இருக்கச் செய்ய இருந்தேன். வாடகை வீட்டிலிருப்பார் இருப்பு வீட்டுக்குடையவர் கட்டளைப்படியே முட்டின்றி முடியும் என்பது இதற்கு ஒப்பு. இராப் பகலற்ற இடமென்பது மறப்பு நினைப்பும் அற்று நெஞ்சம் வஞ்ச மின்றிச் சிவன் திருவடிக்கே இடமாக இருப்பது. எனவே மறவா நினைவுடன் இருந்தேன் என்பதாம். விண்ணாடவர் உற்ற போதெல்லாம் உண்ணாடித் தொழும்பதம் திருவடி அத் திருவடியே புகலிடமாக இருந்தேன். என்னையாட் கொண்டருளும் நந்தியெங் கடவுளின் திருவடிக்கீழ் தாடலைபோல் ஒடுங்கி இருந்தேன்.

Share