திருமந்திரம் – 58

திருமந்திரம் – 58

*திருமந்திரம் – 58*

பரத்திலே ஒன்றாய்உள் ளாய்ப்புற மாகி
வரத்தினுள் மாயவ னாய்அய னாகித்
தரத்தினுள் தான்பல தன்மைய னாகிக்
கரத்தினுள் நின்று கழிவுசெய் தானே.
*பொருள்:* சிவபெருமான் கடந்த மேனிலையுள் ஒன்றேயாய் உள்ளும் புறம்புமாய் விரவி நின்றருள்வன். உயிர்கள் பிறப்பினுள் வருதலாகிய வரத்தின்கண் அயனாய் (காப்பின்கண்) மாயனாய் அம்முறைபோல் இன்னும் பலவாய்த் தோன்றியருள்வன். கரத்தலாகிய மறைப்பினுள் ஆண்டானாய் நின்று ஆருயிர்கட்கு வினைக்கழிவு செய்தருள்கின்றனன்.

Share