போதிதர்மரை எடுத்துக்கொண்டு, போகரை இந்தியாவுக்குத் தந்த சீனா

போதிதர்மரை எடுத்துக்கொண்டு, போகரை இந்தியாவுக்குத் தந்த சீனா

*போதிதர்மரை எடுத்துக்கொண்டு, போகரை இந்தியாவுக்குத் தந்த சீனா!*

போதிதர்மர் இந்தியாவில் இருந்து சீனாவுக்குச் சென்று, நமது பொக்கிஷமான அநேக விஷயங்களை அங்கே கொண்டு சேர்த்தார் என்றும் அங்கேயே வாழ்ந்து மறைந்தார் என்பதையும் நாம் பல விதமான வரலாற்றுச் செய்திகள் மூலம் அறிகின்றோம். இன்னும் சொல்லப்போனால், நடிகர் சூர்யா நடித்த ‘ஏழாம் அறிவு’ திரைப்படம் வந்த பிறகுதான் போதிதர்மர் பற்றிய பேச்சே பலமாக அடிபடத் தொடங்கியுள்ளது.

போதிதர்மர்
*************

சில வேளைகளில் நம்முடைய போதிதர்மரை சீனர்கள் கைபாகமாக மடக்கிவைத்துக் கொண்டுவிட்டார்களே என்ற கோபம்கூட நமக்கு வருவது இயற்கை. ஆனால், அப்படி கோபப்படத் தேவை இல்லை என்கிறார் சமய மெய்யியல் துறை பேராசிரியர் எஸ்.குருபாதம்.குருபாதம்

ஆன்மிகத்தையும், விஞ்ஞான மருத்துவத்தையும் எவ்வளவு அழகாக அவர்கள் கையாண்டார்கள் என்பதற்கு பல விதமான ஆதாரங்கள் நம்மிடம் உள்ளன. இந்தியாவிலிருந்து ஆன்மிக கலாசார பண்பாடு பழக்க வழக்கங்கள் சீனாவுக்குச் சென்றது போல் சீனாவிலிருந்தும் அநேக விஷயங்களை, காலம் நமக்கும் பகிர்ந்தளித்து உள்ளது. அப்படி கிடைத்ததில் மிக முக்கியமானவர் போகர் சித்தர்.

போகர்.
********

motivating and guiding one liners
*சீனா வரும்படி மனவழிமூலம் போகருக்கு வேண்டுகோள்:*

சித்தர் போகர், சித்தர் காளங்கிநாதரின் சீடர் . இந்தியாவிலிருந்து சென்ற காளங்கிநாதர் சீனாவில் மூலிகை மருத்துவத்தையும் சித்த விஞ்ஞானத்தையும் பரப்பியவர். தமிழ்நாட்டில் பழனியில் இருந்த தனது சீடன் போகரை சீனாவுக்கு உடனே வரும்படி மனவழி மூலம் செய்தி அனுப்பினார். அதை மனவழி மூலம் பெற்றுக்கொண்ட போகர், அட்டமாசித்திக் கலையைப் பிரயோகித்து அங்கிருந்து சீனா சென்றடைந்தார். அங்கு தனது குருவைச் சந்தித்தார். அப்போது போகருக்கு நீண்ட ஆயுளுடன் வாழும் காயகல்ப கலையையும், அதற்கான மூலிகைத் தயாரிப்பையும் விளக்கிவிட்டு, அவரது பணியைத் தொடரும்படி கேட்டுக்கொண்டார் என ‘அபிதான சிந்தாமணி’, ‘தமிழ்மொழி அகராதி’ ஆகிய நூல்களில் சித்தர்களைப்பற்றிய பகுதியில் காணப்படுகிறது.

புலிபாணி சித்தர்
*******************

*பாரதத்தில் சீன தேச சித்தர்கள்!*

காளங்கிநாதர் காசியில் பிறந்து, சீனாவில் சித்த விஞ்ஞானத்தைப் பரப்பி பிறகு காஞ்சிபுரத்தில் சமாதியானார் எனவும், இதை மறுத்து அவர் சீனாவில் பிறந்து இந்தியாவில் திருமூலரின் சீடனாக இருந்து பின்பு சீனா சென்று சமாதியானார் எனவும் இரண்டுவிதமான தகவல்கள் கூறப்படுகின்றன.

இவரது சீடரான போகர் சீன தேசத்தவர் எனவும், போகரின் சீடரான புலிப்பாண்டியும் சீனதேசத்தவரே எனவும் இவர்கள் இருவரும் பழனியில் சமாதியானார்கள் எனவும் ஏடுகள் கூறுகின்றன. இன்னொரு சீன தேசத்துச் சித்தரான அழுக்கண்ணா திருக்குறுங்குடியில் சமாதியானார் ”என ஆதாரங்களோடு மறுக்கின்றார்.

*போதி தர்மர் சிலை சீனா*
*****************************

பௌத்த துறவியான போகரின் இயற்பெயர் ‘போ-யாங்’ என நிலைத்துவிட்டதாக அவரைப்பற்றிய தகவல்கள் கூறுகின்றன. இவர் தஞ்சைப் பெரியக்கோயிலின் கோபுரத்தின் உச்சிக் கலசம் கொண்டு சென்ற வைக்க பொறியியல் தொழில்நுட்ப ஆலோசனை வழங்கியவர் என்றும் கூறப்படுகிறது. இவர் அட்டமாசித்தி கலையின் மூலம் கூடுவிட்டுக் கூடு பாய்ந்து பல கால கட்டங்களில் வாழ்ந்துள்ளார்.

*நவபாஷாண சிலை*
***********************

பழனி மலை முருகன் சிலை ஸ்கந்த வடிவமானது.போகர் நவபாஷாணத்தால் இந்தச் சிலையை வடிவமைத்தார். பாதரசம், மதார்சிஸ், தானகம், லிங்கம், கந்தகம், வீரம், பூரம், வெள்ளை, மனோசிலை ஆகியவை நவ பாஷாணங்கள்.

திருமுருக பாஷாணம், கார்முகில் பாஷாணம், இந்திர கோப பாஷாணம், குங்கும பாஷாணம், இலவண பாஷாணம், பவளப் புற்று பாஷாணம், கௌரி பாஷாணம், ரத்த பாஷாணம், அஞ்சன பாஷாணம் ஆகியவையே நவபாஷாணங்கள் என்றும் கூறுவதுண்டு.

நவபாஷாணக் கலவையைக் கல்லாக்குவது, சித்து வேலை. இதை அறிந்தவர் அகத்தியர். அவரிடம் இருந்து கற்றவர் போகர்

இந்த விக்கிரகம் காற்று, நீர், எண்ணெய், தேன், நெய் ஆகியவற்றால் கரையாது. நெருப்பால் பாதிப் படையாது. தீராத நோய்களையும் தீர்த்து ஆயுளை அதிகரிக்கச் செய்யும் வல்லமை நவபாஷாணத்துக்கு உண்டு.

*பழனி மலை*
***************

போகரின் சீடர் புலிப்பாணிச் சித்தரும், அவரது வழிவந்த பண்டாரப் பெருமக்களும் தண்டாயுத பாணியைப் பராமரித்து வந்தனர்.

போகருக்கு பழநி கோயிலில் தனிச் சந்நிதி உள்ளது. போகரின் சீடர் புலிப் பாணி முனிவருக்கு ஒரு மடம் உள்ளது. இவர் சந்ததியினருக்கு கோயிலில் பூஜை செய்யும் உரிமையும், விஜய தசமி அன்று அம்பு போடும் உரிமையும் உள்ளது. ஆலயத்தின் தென்மேற்கு மூலையில் போகரது சமாதி உள்ளது. அதில் அவர் வழிபட்டதாகக் கருதப்படும் புவனேஸ்வரியின் திருவுருவமும், மந்திரச் சக்கரங்களும், மரகதலிங்கமும் உள்ளன. இவற்றுக்கு தினசரி வழிபாடுகள் நடைபெறுகின்றன.

*கதிர்காமத்தில் போகர்:*
***************************

போகர் பழனியில் சமாதி எய்துவதற்கு முன், அவர் இலங்கையிலுள்ள கதிர்காமத்துக்குச் சென்று 1,008 தாமரை இதழ் வடிவம் கொண்ட இயந்திர ஸ்தலம் அமைத்தார் எனக் கூறப்படுகின்றது. அங்கு இருந்த சித்தர் கிரிஜா பாபாஜி நாகராஜ் போகரிடம் கிரியா யோகம் கற்று போகரின் சீடர் ஆனார். பிற்காலத்தில் கிரியா பாபாஜி கதிர்காமத்தில் சமாதி எய்தினார். அவரது நினைவாலயமாக கிரிஜா பாபாஜி ஸ்தலம் அங்கு அமைந்துள்ளது.

Share