பிரம்மன்

பிரம்மன்

பிரம்மா மும்மூர்த்திகளில் ஒருவரான இவர் விஷ்ணுவின் தொப்புழ்லிருந்து உருவானர். ஆயிரம் யுகங்களைக் கொண்ட கல்பம் என்பது பிரம்மாவிற்கு ஒரு பகலாகும், அடுத்த கல்பம் பிரம்மாவின் இரவாக கருதப்பெறுகிறது. படைக்கும் தொழிலை கொண்ட இவரின் மனதிலிருந்து மரீசி, அத்திரி, ஆங்கிரசர், புலஸ்தியர், புலஹர், கிரது, வசிஷ்டர் முதலிய சப்த ரிசிகளை படைத்தவர், மனு என்ற முதல் ஆணையும், சதரூபை என்ற முதல் பெண்ணையும் பூமியில் படைத்தார். மனுவின் வம்சம் என்பதாலேயே மனுசன்(மனிதன்) என்று வந்ததாக கூறுவர். பிரம்மா தன்னுடைய தொடையிலிருந்து நாரத மகரிசியையும், பெருவிரலிருந்து தட்சனையும் படைத்தார். மனு-சதரூபை மகளாகிய பிரசூதியயை தட்சன் மணம் புரிகிறார். தட்சனுக்கு 60 புதல்விகள்.

பிரம்மா காம கடவுளாகின் மன்மதனை படைக்கிறார், மலர் அன்பை யார்மீது தொடுக்கிறாயோ அவர்கள் காம எண்ணம் தோண்றும் என்னும் வரத்தை தருகிறார். காமன் மலர் கனையயை பிரம்மன் மீது தொடுத்து சோதனை செய்ய, பிரம்மன் தான் படைத்த சந்தியா என்னும் பெண்ணழகில் மயங்குகிறார். இதனை அறிந்த சிவபெருமான் உமக்கு கோவிலில் அபிஷேக வழிபாடு இருக்காது என பிரம்மனை சபிக்கிறார். பின்பு ஒருமுறை பிரம்மனின் தலைகணத்தை அடக்க பிரம்மனின் ஐந்து தலைகளில் ஒன்றான கழுதை தலையயை சிவபெருமான் கிள்ளியெரிந்தார். அதனால் நாமுகன் எனவானது.

Share