புண்டரீகாட்ச பெருமாள் (தாமரைக் கண்ணன்)- திருவெள்ளறை

புண்டரீகாட்ச பெருமாள் (தாமரைக் கண்ணன்)- திருவெள்ளறை

ஸ்ரீரங்கத்திற்கும் முந்தியதான இதன் தொன்மையைக் குறிக்கவே ஆதிவெள்ளறை என்று இது அழைக்கப்படுகிறது. வடமொழியில் ஸ்வேதகிரி என்றும், உத்தம ஷேத்ரம், ஹிதஷேத்ரம் என்றும் பெயர் பெறுகிறது.

அயோத்திக்கு அதிபதியாய் விளங்கிய சிபிச் சக்ரவர்த்தி ஒரு சமயம் தன் படை பரிவாரங்களுடன் வந்து திருவெள்ளறையில் தங்கி இருக்கும் போது, அங்கு தோன்றிய ஒரு வெள்ளைப் பன்றியைத் (ஸ்வேத வராம்) துரத்த அது பக்கத்தில் உள்ள ஒரு புற்றில் சென்று மறைந்துவிட்டது. இதனைக்கண்டு ஆச்சர்யமுற்ற சிபி அங்கே தவம் செய்து கொண்டிருந்த மார்க்கண்டேயரை அணுகி வினவ, அவர் சொற்படி பன்றி மறைந்த அப்புற்றுக்குப் பாலால் திருமஞ்சனம் செய்து வழிபட உடனே பகவான் சிபிச் சக்கரவர்த்திக்கும், மார்க்கண்டேயருக்கும் நின்ற திருக்கோலத்தில் காட்சியருளியதாகவும், அதனாலேயே “ஸ்வதே வராஹத் துருவாய் தோன்றினான் வாழியே” என்ற திருப்பெயரும் இப்பெருமாளுக்கு உண்டாயிற்று.

மார்க்கண்டேயரின் வேண்டுகோளின்படி வடநாட்டில் வாழ்ந்து வந்து 3700 ஸ்ரீ வைஷ்ணவர்களை இங்கே கொண்டுவந்து குடியேற்றி கோவிலையுங்கட்டிப் பெருமாளையும் பிரதிஷ்டை செய்தார் சிபிச் சக்கரவர்த்தி. பிரதிஷ்டை செய்ததும் ஒரு வைஷ்ணவர் காலமாகிவிடவே மிகவும் மனம் வருந்தினார். சிபி. சிபிச் சக்கரவர்த்தியின் வேதனையைத் தீர்க்க பகவான் ஒரு ஸ்ரீ வைஷ்ணவனின் வேடங்கொண்டு மன்னனிடம் வந்து வேதனைப் படாதே, என்னையும் சேர்த்தே 3700 என கணக்கிட்டேன் என்று ஸ்ரீவைஷ்ணவர்களின்
மேன்மைக்கு அடையாளமிட்ட திவ்ய தேசம்.

இங்கு ஸ்வஸ்திக்குளம் என்று சொல்லப்படும், சக்ரகுளம் ஒன்று உள்ளது. இதில் ஒரு துறையில் குளிப்பவர்களை இன்னொரு துறையில் குளிப்பவர்கள் பார்க்க முடியாத வண்ணம் அமைக்கப்பட்டுள்ளது.

swasthik well

Share