திருமந்திரம் – 68

திருமந்திரம் – 68

அஞ்சன மேனி அரிவையோர் பாகத்தன்
அஞ்சொ டிருபத்து மூன்றுள ஆகமம்
எஞ்சலில் விஞ்ஞகர் இருபத் தெண்மரும்
அஞ்சா முகத்தில் அரும்பொருள் கேட்டதே.

உமையவளை தன் இடபாகம் கொண்டுள்ள அர்த்த நாரீஸ்வரர் சிவபெருமான் ஐந்தோடு இருபத்து மூன்று ஆகமம் (5+23=28) அதாவது 28 ஆகமங்களையும், கை வணங்கி நின்ற 63 தெவர்களுக்கு சதாசிவத்தின் ஐந்தாவது முகமான ஈசான முகத்தினால் சொல்லப்பட்டது.
நான்கு வேதங்களின் இறுதி வடிவம் தான் 28 சிவ ஆகமங்கள் என்று முதலில் கூறுவது திருமூலர் என்று கூறுவர். அதன் சாராம்சம் தான் திருமந்திரம் என்றும் கூறுவர். சதாசிவத்தின் ஐந்து முகங்களின் பெயர்கள் : வாமதேவம், அகோரம், தற்புருடம், சத்யோசாதம், ஈசனம்.

Share