அகஸ்தியர் வைத்திய சதகம் – 58

அகஸ்தியர் வைத்திய சதகம் – 58

*_வாதத்தில் வாய்வு குறிக்குணம்_*
அடருகின்ற வாதத்தில் வாய்வு வந்து அணுகினால் வலிவீச்சு திமிர் வியாதி

தொடருகின்ற ஆனந்தவாய்வு பக்கசூலை தொடைகுறுக்கு விலாபிடரிதுடியாம் நெஞ்சில்

படருகின்ற நரம்பு சீப்பு இடங்கடோறும் பரந்து குத்தி கொழுத்து நெஞ்சு குத்துமாகும்

இடருறவே சீதமுண்டாம் கபம் பெந்திக்கும் இதனாலே பலபிணி வந்திருக்கும் பாரே. (58)

*பொருள் :* வாதத்தில் வாய்வு சேர்ந்த குணம் ஏதெனில் வலி, பிற வீச்சு,திமிர், ஆனந்த வாய்வு, சூலை, தொடை, குறுக்கு, விலா, பிடரிஇவைகள் துடிக்கும். நெஞ்சில் உள்ள நரம்புகள் குத்தி கொளுத்தி வலிக்கும். சீதம் உண்டாகும். கபம் காணும் போன்ற பல பிணிகள் வரும்.

Share