அகஸ்தியர் வைத்திய சதகம் – 59

அகஸ்தியர் வைத்திய சதகம் – 59

அகஸ்தியர் வைத்திய சதகம் – 59

இருக்குமந்த வாதத்தில் சீதம் சேர்ந்தால் இழைப்பிருமல் விசசன்னி தோசம் வீச்சு

மறுக்கின்ற குளிர் காய்ச்சல் விரணதோசம் வாந்திபொருத்திடம் உளைவுமயக்கம் சோர்வு

ஒருக்கின்ற மலபந்தம் பொருமல் வீக்கம் உள்வீச்சு சூலையொடு பாண்டுரோகம்

தருக்கின்ற தனுர்வாதம் பக்கவாதம் சார்ந்து வெகுபிணி பலவும் தழைக்கும் பாரே.

*பொருள் :* வாதத்தில் சீதம் சேர்ந்தால் இளைப்பிருமல், சன்னி, பிற வீச்சு, குளிர்சுரம், புண், வாந்தி, பொருத்துகள் தோறும் உளைவு,மயக்கம், சோர்வு, மல பந்தம், வயிறு பெருமல், உடல் வீக்கம், உள் வீச்சு, சூலை, பாண்டு, தனுவாதம், பக்கவாதம் போன்ற பல நோய்கள் வரும்.

Share