சிவசிந்தனை பாகம்9

சிவசிந்தனை பாகம்9

சிவாய நம.

திருச்சிற்றம்பலம்

*நாற்பாதங்கள்*

ஞானம்.

சாமு சித்தராய் பத முக்தி அடைந்த உயிர்கள் மீண்டும் ஞானத்தை அடைய இங்கு பிறவி எடுக்கின்றனர்.

இப்படி பிறக்கும் உயிர்களுக்கு இறைவன் தானே குருவாய் இறங்கி வந்து ஞான தீக்கை வழங்கி உபதேசம் செய்வார்.

இதில் ஐந்து அங்கங்கள்.

கேட்டல்

பக்குவமடைந்த உயிர்களுக்கு மேலான நூல்களின் மேன்மையும் உலக உண்மையையும் இறைவன் உபதேசிக்கும் போது அவர் உபதேசித்தவாறே கேட்டல்.

கேட்பித்தல்

அப்படி கேட்டதை பிறருக்கு கேட்பித்தல்.

சிந்தித்தல்

கேட்ட விஷயங்களை சிந்தித்தல்.

தெளிவடைதல்.

சிந்தித்த பின் அதில் தெளிவடைய்தல்.

நிஷ்டை கூடுதல்.

தெளிந்த விஷயத்தை நோக்கி நிஷ்டையில் ஆழ்தல்.

இது தான் உயிரின் கடைசி நிலை.

இந்த ஞானத்தில் நிற்பவர்கள் மட்டுமே நிற்குணப்பிரம்மத்தை சொரூப சிவனை வழிபட முடியும்.

இப்படி ஞானத்தில் நின்றவர்களே அருளாளர்கள் நாயன்மார்கள்.

இவர்கள் ஞானமடைந்த பின் கூட வழிபாடுகள் தலயாத்திரை இதெல்லாம் செய்தார்கள்.

ஏன் என்றால் இறைவன் மீதான பக்தி இந்த நாற்பாதங்களிலும் வேண்டும் என்பதை நமக்கு உணர்த்தவே.

ஏன் ஞானத்தை அடைந்த அப்பர் பெருமான் சரியை தொண்டை செய்ய வேண்டும்.

அவர் ஆன்ம பக்குவத்திற்காக அல்ல.

அது முதல் படி என்று நமக்கு உணர்த்த அவர் அதை செய்யும் படி இறைவன் படைத்தார்.

ஞானத்தில் சரியையில் நின்றவர் அப்பர் பெருமான்

ஞானத்தில் கிரியையில் நின்றவர் சம்பந்தர் பெருமான்.

ஞானத்திலு யோகத்தில் நின்றவர் சுந்தரர் பெருமான்.

ஞானத்தில் ஞானத்தில் நின்றவர் மாணிக்கவாசகர் பெருமான்.
இறைவன் இவர்களது குரலுக்கு ஒடி வரினும் இவர்கள் ஆலயங்கள் ஆலயங்களாக சென்று இறைவனை பாடி புகழ்ந்தனர்.

இன்று யோகத்தில் நிற்ப்பவர்கள் ( உண்மயாக நின்றால் கூறமாட்டார்கள்) நாங்கள் தான் நிற்குணப்பிரம்மத்தை வணங்குகிறோம் என்றும் கோயிலுக்கு செல்வது வீண் வேலை என்றும் கூறுகின்றனர்.

முதலில் இவர்களாலும் நிற்குணப்பிரம்மத்தை வழிபட முடியாது என்பதே உண்மை.

இந்த நான்கு படி நிலையில் நிற்போரும் ஒன்றை ஒன்று குறை கூறுவதோ ஏளனம் செய்வதோ கூடவே கூடாது.

அப்படி செய்பவர்கள் தங்கள் படி நிலையில் மேலாய் இருந்தாலும் கீழ் இறங்கிவிடுவர்.

சரியை இன்றி கிரியை இல்லை கிரியை இல்லாமல் யோகம் இல்லை யோகம் வராமல் ஞானம் வராது.

ஆக நாற்பாதங்களை நன்கு உணர்ந்து இறைவன் அவரவருக்கு உணர்த்தியை படி முறையை பின்பற்றி ஆன்ம பக்குவம் அடையும் வழியை தேடுவோமாக.

சிவாய நம

திருச்சிற்றம்பலம்

Share