அகஸ்தியர் வைத்திய சதகம் – 5

அகஸ்தியர் வைத்திய சதகம் – 5

“உண்டான பொறியதுவே சோத்திரந் தொக்கு
உறுதியுள்ள சட்சுசிங் ஙுவைஆக் கிராணங்
கண்டாயோ செவியுடம்பு நயனம் நாக்கு
கந்தமுறு மூக்குமிவை தானஞ் சாகும்
விண்டாலோ புலணைந்து விள்ளக் கேளு
விரிந்த சத்த பரிசமுடன் ரூபர சகெந்தந்
திண்டாடுஞ் சத்தமது செவியிற் கேட்குந்
தேகமது சுகமறியும் பரிச மாமே.”

சோத்திரம் – செவி, தொக்கு – உடம்பு, சட்சு – கண்கள், சிங்குவை – நாக்கு, ஆக்கிராணம் – மூக்கு என் இவ்வைந்தும் ஞானேந்திரியக் காரியங்களாகிய, சப்தத்தைக் காதால் கேட்பதும், ஸ்பரிசத்தை உடம்பால் உணர்வதும், ரூபத்தை கண்களால் பார்ப்பதும், இரசம் என்ற சுவையை நாக்கால் அறிவதும், கந்தம் என்ற வாசனையை மூக்கால் முகருவதுமான தொழில்களை இவ்வுடலில் நடத்திக் கொண்டு இருக்கின்றன.

Share