ஐந்து வகை யோகம்

ஐந்து வகை யோகம்

1) இறைவனைத் தியானித்து அருமறை மந்திரங்களை ஜபிப்பது மந்திர யோகம் ஆகும்.
2) தூய மனதுடன் ரேசகம், பூரகம் செய்து கும்பத்தில் ஆன்மாவை நிறுத்துவது பரிச யோகம் எனப்படும்.
3) உலகில் அனைத்தையும் மறந்து, உள்ளத்தை ஒருநிலைப்படுத்தி, உள்ளத்தில் இறைவனைக் காண்பது பாவ யோகம் ஆகும்.
4) உலகம் வேறு, தான் வேறு என்ற பேதமின்றி உள்ளும் புறமும் தன்னையே காண்பது ஞான யோகம் ஆகும்.
5) சோதியாய், நிர்மலமாய், ஆனந்தமயமாய், பழுதில்லாததாய், ஆதியாய் உறையும் பொருளை அறிவது மகா யோகம் எனப்படும்.

Share